
கொங்கு வட்டார பின்னணியில் உருவாகியுள்ள படத்துக்கு ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
திருமலை புரொடக் ஷன் சார்பில் கா.கருப்புசாமி தயாரித்துள்ள இப்படத்தை சுகவனம் எழுதி இயக்கியுள்ளார். ‘பரோட்டா’ முருகேசன், கார்த்திகேசன், முருகன், விஜயன், சேனாபதி, சித்ரா, கவுசிகா, தமிழினியன் விகடன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜெ.டி.விமல் ஒளிப்பதிவு செய்துள்ளார். நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார்.

