ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம், ‘கூலி’. ரஜினியின் 171-வது படமான இதில், சத்யராஜ், நாகார்ஜுனா, சவுபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன், உபேந்திரா என பலர் நடித்துள்ளனர். இந்தி நடிகர் ஆமிர்கான், இதில் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் ஆக. 14-ல் ரிலீஸாகி ஓடி கொண்டிருக்கிறது. இந்தப் படத்துக்காக ஆமிர்கான் ரூ.20 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக சமூக வலைதளத்தில் செய்தி பரவியது. ஆனால், இதை நடிகர் ஆமிர்கான் மறுத்துள்ளார்.
“கூலி படத்துக்காக நான் சம்பளம் ஏதும் வாங்கவில்லை. நான் ரஜினி சார் மீது மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்திருக்கிறேன். அவருடன் நடித்ததே எனக்குப் பெரிய பரிசுதான். அதனால் பணம் பற்றி யோசிக்கக் கூட முடியவில்லை” என்று ஆமிர்கான் தெரிவித்துள்ளார்.