தனது குழந்தையின் பெயரை ஜாய் கிரிசில்டா அறிவித்திருக்கும் பதிவு, மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.
சமீபத்தில் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் தனக்கும் திருமணம் நடைபெற்றதாக புகைப்படத்துடன் அறிவித்தார் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா. இது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. மேலும் தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்தார் ஜாய் கிரிசில்டா. இந்த விவகாரம் தொடர்பாக எந்தவொரு பதிவையும் இதுவரை வெளியிடவில்லை மாதம்பட்டி ரங்கராஜ்.
இதனிடையே, சில தினங்களுக்கு முன்பு கோவையில் நடைபெற்ற விழா ஒன்றில் தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் கலந்துக் கொண்டார் மாதம்பட்டி ரங்கராஜ். இந்த வீடியோ மற்றும் புகைப்பட பதிவுகள் இணையத்தில் பெரும் வைரலாக பரவியது. இதனால் முதல் மனைவியுடன் மீண்டும் இணைந்துவிட்டதாக பலரும் கருதினார்கள்.
இதற்கு போட்டியாக ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் புகைப்படத்துடன் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் குழந்தை பிரசவிக்க அடிக்கடி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்று வருவது பிடித்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், தனது குழந்தையின் பெயர் ராஹா ரங்கராஜ் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவு மேலும் சர்ச்சையினை பெரிதாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ‘பொன்மகள் வந்தாள்’ இயக்குநர் ஜே.ஜே.ஃப்ரெட்ரிக்கை திருமணம் செய்து விவகாரத்து செய்தவர் ஜாய் கிரிசில்டா என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஜாய் கிரிசில்டா குறித்து இதுவரை எந்தவொரு பதிவையும் மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிடாமல் இருப்பது பல்வேறு கேள்விகளையும் எழுப்பி இருக்கிறது. இந்த விவகாரம் விரைவில் விஸ்வரூபம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hospital visits be like
Raha Rangaraj #madhampattyrangaraj #ourlittlebundleofhappiness #parentstobe #PregnancyJourney #baby2025 pic.twitter.com/mE524TQjRq
— Joy Crizildaa (@joy_stylist) August 13, 2025