
தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். அவர் இப்போது ‘ரிவால்வர் ரீட்டா’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். சந்துரு இயக்கியுள்ள இப்படம் நவ.28-ல் வெளியாக இருக்கிறது. மேலும், விஜய் தேவரகொண்டாவுடன் ‘தோட்டம்’, மிஷ்கினுடன் ஒரு படம் என நடித்து வருகிறார்.
இந்நிலையில், யுனிசெஃபின் குழந்தைகள் நலனுக்கான தூதராக கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து தனது சமூக வலை தளப் பக்கத்தில் தெரிவித் துள்ளஅவர், “இந்தியாவில் குழந்தைகளுக்கான யுனிசெஃப் தூதராக இணைவதில் பெருமைப்படுகிறேன். ஒவ்வொரு குழந்தையும் ஆரோக்கியமாக வளரவும், கற்றுக்கொள்ளவும், கனவு காணவும் தகுதியானது.

