கிஷன் தாஸ் மற்றும் ஹர்சத் கான் இணைந்து நடித்துள்ள படத்துக்கு ‘ஆரோமலே’ என தலைப்பிட்டுள்ளனர்.
‘தருணம்’ படத்துக்குப் பிறகு புதிய படமொன்றில் நாயகனாக நடித்து வந்தார் கிஷன் தாஸ். இதன் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வந்தது. இதனை ‘மார்க் ஆண்டனி’ படத்தின் தயாரிப்பாளர் வினோத் குமார் தயாரித்து வந்தார். தற்போது இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இப்படத்துக்கு ‘ஆரோமலே’ எனத் தலைப்பிட்டுள்ளனர். இதன் அறிமுக வீடியோவினை அனிருத் வெளியிட்டுள்ளார். இதற்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதில் ஹர்சத் கான், ஷிவாத்மிகா, விடிவி கணேஷ், சிபி ஜெயகுமார், நம்ரிதா உள்ளிட்ட பலர் கிஷன் தாஸ் உடன் நடித்துள்ளனர். சரங் தியாகு இயக்கியுள்ள இப்படத்துக்கு சித்து குமார் இசையமைத்திருக்கிறார். விரைவில் இப்படத்தினை விளம்பரப்படுத்தி ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.