‘கிங்டம்’ படத்தில் நீக்கப்பட்ட காட்சிகளை இணைத்து ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.
கவுதம் நுன்னூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ போஸ், சத்ய தேவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கிங்டம்’. பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும், படமும் எதிர்பார்த்த வசூலை ஈட்டவில்லை. தற்போது இதன் ஓடிடி வெளியீட்டில் சில மாற்றங்களை செய்யவுள்ளது படக்குழு.
‘கிங்டம்’ படத்திலிருந்து நீக்கப்பட்ட ஹிரிதயம் பாடல் மற்றும் ஒரு சண்டைக் காட்சியை சேர்த்து ஓடிடியில் வெளியிடவுள்ளார்கள். ஹிரிதயம் பாடல் பெரும் வரவேற்பைப் பெற்ற பாடலாகும். இப்படம் வெளியானவுடன் பலரும் இப்பாடல் இல்லாதது குறித்து தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார்கள். தற்போது இதனை ஓடிடியில் சேர்க்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
மேலும், ‘கிங்டம்’ படத்தின் அடுத்த பாகம் படப்பிடிப்புக்கு முன்பாக ஓடிடிக்கு என்று படமொன்றை திட்டமிட்டு இருக்கிறார்கள். அது முருகன் மற்றும் சேது கதாபாத்திரங்களை வைத்து உருவாக்கவுள்ளார்கள். அதனைத் தொடர்ந்து ‘கிங்டம் 2’ உருவாகும் என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் கவுதம் நுன்னூரி.