
ராஜமவுலி இயக்கத்தில், மகேஷ் பாபு நாயகனாக நடிக்கும் படம் ‘வாரணாசி’. இதில் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இது பார்வையாளர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இதில் ‘ருத்ரா’ என்ற கதாபாத்திரத்தில் மகேஷ் பாபு நடிக்கிறார்.
அவருடன் இதில் ‘கும்பா’ என்ற கதாபாத்திரத்தில் பிருத்விராஜும், மந்தாகினி என்ற கதாபாத்திரத்தில் பிரியங்கா சோப்ராவும் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்காக ‘குளோப் டிரோட்டர்’ என்ற சாகச உலகத்தைப் படக்குழு உருவாக்கியுள்ளது. இதற்கான விழாவை ஹைதராபாத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டது.

