அமேசான் ப்ரைம் தளத்தில் ‘தலைவன் தலைவி’ படம் ஆகஸ்ட் 22-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் ‘தலைவன் தலைவி’. வசூல் ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழகத்தில் மொத்த வசூலில் ரூ.50 கோடியை கடந்து சாதனை புரிந்தது. தற்போது இப்படம் ஆகஸ்ட் 22-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
‘தலைவன் தலைவி’ திரைப்படம் வெளியாகும் முன்பே ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமம் அனைத்துமே விற்கப்பட்டது. முழுமையாக குடும்பத்தை மையப்படுத்திய படம் என்பதால் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் காமெடி காட்சிகளும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன், ஆர்.கே.சுரேஷ், செம்பியன் வினோத், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘தலைவன் தலைவி’. சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவாளராக சுகுமார், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரிந்திருந்தனர்.