Last Updated : 24 Jul, 2025 10:35 AM
Published : 24 Jul 2025 10:35 AM
Last Updated : 24 Jul 2025 10:35 AM

மணிவர்மன் இயக்கத்தில் தமன் நடித்த படம், ‘ஜென்ம நட்சத்திரம்’. இதில் மால்வி மல்கோத்ரா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் ஜூலை 18-ல் வெளியானது. இதன் நன்றி அறிவிப்பு விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
நடிகர் தமன் பேசும்போது, “என்னுடைய முந்தைய படமான ‘ஒரு நொடி’ அதன் பட்ஜெட்டை திரும்பக் கொடுத்தது. ஆனால், ‘ஒரு நொடி’ படத்தின் மொத்த பட்ஜெட்டையும் ‘ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் மூன்று நாள் கலெக்ஷன் கொடுத்துள்ளது. பட ரிலீஸுக்கு முன்பு படக்குழுவில் யாரும் சரியாகத் தூங்கவில்லை. ஆனால், கலெக்ஷன் பார்த்த பின்புதான் நிம்மதியாக இருந்தது. தமிழ்நாட்டில் 150 திரையரங்குகளில்தான் முதலில் படம் திரையிட்டோம். பிறகு ஸ்கிரீன் எண்ணிக்கையை அதிகரித்தார்கள். ஒவ்வொரு படத்திலும் கற்றுக் கொள்ள விஷயங்கள் இருக்கும். ஆனால், இந்தப் படம் எனக்கு நிறைய சொல்லிக் கொடுத்தது என்றார்.
FOLLOW US
தவறவிடாதீர்!