என் வாழ்வின் முக்கியமான நிகழ்வு கலைமாமணி விருது என்று மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு சார்பில் 2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது. அதில் 2023-ம் ஆண்டுக்கான நடிகருக்கான கலைமாமணி விருது பெறவுள்ளார் மணிகண்டன். இந்த விருது வென்றது குறித்து மணிகண்டன் தனது எக்ஸ் தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மணிகண்டன், “சிறப்புமிக்க கலைமாமணி விருது எனக்கு வழங்கிய தமிழ்நாடு அரசாங்கத்திற்கு மற்றும் இயல் இசை நாடக மன்றத்துக்கு என் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் வாழ்வில் இது ஒரு முக்கியமான நிகழ்வாகும். என்னை தொடர்ந்து ஆதரித்து வந்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் முக்கியமாக தமிழக மக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். இந்த கவுரவம் உங்களுக்கெல்லாம் சொந்தமானது” என்று தெரிவித்துள்ளார்.
— Manikandan (@Manikabali87) September 26, 2025