’டூரிஸ்ட் பேமிலி’ படத்தைப் பார்த்துவிட்டு புகழாரம் சூட்டியிருக்கிறார் த்ரிஷா.
அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘டூரிஸ்ட் பேமிலி’. குறைந்த முதலீட்டில் எடுக்கப்பட்டு மாபெரும் வசூல் சாதனை புரிந்துள்ளது. இப்படத்தினை பார்த்துவிட்டு ரஜினி, சிவகார்த்திகேயன், நானி உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்கள்.
தற்போது ஓடிடி தளத்தில் ‘டூரிஸ்ட் பேமிலி’ பார்த்துவிட்டு த்ரிஷாவும் பாராட்டு தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தனது பதிவில், “’டூரிஸ்ட் பேமிலி’ படத்தினை தாமதமாக பார்த்தேன். என்ன ஒரு படம், என்ன ஒரு நடிப்பு. சசிகுமார் சார், திரைக்கு உள்ளேயும், வெளியேயும் சிறந்த மனம் கொண்டவர்களுக்கு நல்லதே நடக்கும் என்பதற்கு நீங்கள் தான் வாழும் உதாரணம்.
எனக்கு பிடித்த சிம்ரன் மேடம், நான் உங்களை சந்தித்த நாளிலிருந்து நீங்கள் தான் எனக்கு உத்வேகம். எம்.எஸ்.பாஸ்கர் சார், குமாரவேல் சார், பக்ஸ் சார், சின்ன பையன் மற்றும் நடித்த நடிகர்கள் அனைவருமே சிறப்பாக நடித்திருந்தனர். வாழ்த்துகள் அபிஷன். இவ்வளவு உண்மையான மற்றும் அழகான படத்தை உருவாக்கியதற்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார் த்ரிஷா.