Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, June 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»“எனக்கு பலரும் பணம் தரணும்!” – யோகி பாபு காட்டம்
    சினிமா

    “எனக்கு பலரும் பணம் தரணும்!” – யோகி பாபு காட்டம்

    adminBy adminMay 9, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “எனக்கு பலரும் பணம் தரணும்!” – யோகி பாபு காட்டம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    “எனக்கு எவ்வளவோ பேர் பணம் தரவேண்டும்…” என்று பட விழாவில் பேசும்போது யோகி பாபு காட்டமாக குறிப்பிட்டார். சில தினங்களுக்கு முன்பு ‘கஜானா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் யோகி பாபு படத்தை விளம்பரப்படுத்துவதற்கு ரூ.7 லட்சம் கேட்பதாக தயாரிப்பாளர் ஒருவர் குற்றம்சாட்டினார். இது திரையுலகில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும், இந்தப் பேச்சுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று ‘கஜானா’ தயாரிப்பாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

    இதனிடையே யோகி பாபு நடித்துள்ள ‘ஜோரா கைய தட்டுங்க’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் யோகி பாபு கலந்துகொண்டு பேசும்போது, “என் சம்பளம் எவ்வளவு என்று எனக்கே தெரியாது. அனைத்தையும் வெளியில் இருப்பவர்கள் தான் முடிவு செய்கிறார்கள். நீங்களே சம்பளத்தை முடிவு செய்து நல்ல கதைகளை அனுப்புங்கள். ஆனால், சொன்ன சம்பளத்தை மட்டும் வாங்கிக் கொடுத்துவிடுங்கள். சம்பள பாக்கியை கேட்டால் தான் இங்கு எதிரியாகி விடுகிறேன். அதுதான் உண்மை.

    கடந்த இரண்டு விழாக்களுக்கு வரவில்லை. அது சம்பந்தமாக பலரும் என் மீது குற்றம்சாட்டினார்கள். அந்தப் படம் என்னிடம் உதவியாளராக வேலை செய்தவர் நாயகனாக நடித்த படம். அதில் 2 நாட்கள் நடித்துக் கொடுக்க முடியுமா என்றார்கள்; நடித்தும் கொடுத்தேன். அதில் நான் நாயகன் அல்ல. அதற்குத் தான் ரூ.7 லட்சம் கேட்டதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் படம் என்னுடைய படம், அழைத்தார்கள் உடனே வந்துவிட்டேன்.

    எனக்கு எவ்வளவோ பேர் பணம் தரவேண்டும். அந்த லிஸ்ட்டை எடுத்துக் கொடுத்தால் பணம் வாங்கிக் கொடுத்துவிடுகிறேன் என்றால் சொல்லுங்கள், கொடுக்கிறேன். என்னைப் பொறுத்தவரை நான் அனைவருக்குமே உறுதுணையாக இருந்திருக்கிறேன். என்னைப் பற்றி பேசுபவர்கள் பேசட்டும், அவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார்” என்று தெரிவித்துள்ளார் யோகி பாபு.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    ‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல் – இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்

    June 30, 2025
    சினிமா

    ‘நூறு நாள் திரைப்படம் 3’ – பிரதீப் ரங்கநாதன் மகிழ்ச்சி

    June 30, 2025
    சினிமா

    ‘திடீரென பேய் வரும், திடுக்கிட மாட்டீர்கள்!’ – அவசரக் கல்யாணம்

    June 30, 2025
    சினிமா

    கார்த்தியை ஆச்சரியப்பட வைத்த விஷ்ணு விஷால்!

    June 30, 2025
    சினிமா

    லவ் மேரேஜ்: திரை விமர்சனம்

    June 30, 2025
    சினிமா

    ‘டிராகன்’ வெற்றி முக்கியமானது: 100-வது நாள் விழாவில் பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி!

    June 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “ரஹ்மானுடன் அரசியல் பேசவில்லை; பாஜகவுக்கு மீனா வந்தால்…” – எல்.முருகன் விவரிப்பு
    • விண்வெளி பொருளாதாரத்தில் இந்தியா முன்னேற்றம்: மத்திய இணை அமைச்சர் நம்பிக்கை
    • பிரமிடுகளை விட வயதான இந்தியாவில் பண்டைய தளங்களை கட்டாயம் பார்க்க வேண்டும்
    • மணிப்பூரில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு – 4 பேர் உயிரிழப்பு
    • பயிற்சியாளர்களின் கைப்பாவையா ஷுப்மன் கில்? – ‘கேப்டன்சி’ ஒரு பார்வை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.