இந்த நிகழ்வில் ராஜமவுலி பேசிய விஷயங்கள் சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளன. அவர் பேசியதாவது: “இது எனக்கு ஒரு உணர்வுபூர்வமான தருணம். எனக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லை. என் அப்பா அனுமன் நமக்கு பின்னால் இருந்து அனைத்தையும் கவனித்துக்கொள்வார் என்றார். அவர் இப்படித்தான் கவனித்துக்கொள்கிறாரா – இதை நினைத்து எனக்கு கோபம் வருகிறது. என் மனைவிக்கும் அனுமன் மீது அன்பு உண்டு. அவர் ஒரு நண்பரைப் போல அவருடன் உரையாடுகிறார். எனக்கும் அவர் மீது கோபம் வருகிறது. என் அப்பா அனுமனைப் பற்றிப் பேசி, படத்தின் வெற்றிக்கு அனுமனின் ஆசீர்வாதங்களை நம்பியிருக்கச் சொன்னபோது, எனக்கு மிகவும் கோபம் வந்தது” இவ்வாறு ராஜமவுலி பேசினார்.
‘வாரணாசி’ நிகழ்வின் போது ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினைகள் குறிப்பிட்டு ராஜமவுலியின் இவ்வாறு பேசியது சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது. இது குறித்து பதிவிட்டுள்ள பயனர் ஒருவர், “ராஜமவுலியின் பேச்சு நியாயமில்லை. கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்பவர், தன் படத்துக்கு ‘வாரணாசி’ என்று தலைப்பிட்டு புராணக் கதாபாத்திரங்களைப் பயன்படுத்தியது ஏன்? இப்படி ஒரு மதிப்புமிக்க நபரிடமிருந்து இதனை எதிர்பார்க்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

