நடிகர் விதார்த் அடுத்து ஹீரோவாக நடிக்கும் படத்தை கே.எஸ்.அதியமான் இயக்குகிறார். இதில் நடிகை ரேவதி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்றும் லிஜோ மோல் ஜோஸ், அர்த்தனா பினு, சஞ்சித், அபிராமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். குழந்தை நட்சத்திரம் ஸ்ரீலயா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசை அமைக்கிறார். கவியரசு ஒளிப்பதிவு செய்கிறார்.படம் பற்றி கே.எஸ்.அதியமான் கூறும்போது, “அம்மா – மகன், கணவன் – மனைவி, ஒரு காதல் -இவற்றைச் சுற்றி நடக்கும் உண்மைக்கு நெருக்கமான கதை இது. அனைவராலும் உணர்வுப்பூர்வமாக இந்த கதையை தங்களுடன் தொடர்புப் படுத்திப் பார்த்துக்கொள்ள முடியும். இந்த கதை உண்மையாகவே இருக்கும்” என்றார்.