‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார் கிச்சா சுதீப்.
ஓடிடி தளத்தில் வெளியாகி அதிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. இப்படத்தினை பல்வேறு திரையுலக பிரபலங்களும் பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். தற்போது அந்த வரிசையில் கிச்சா சுதீப்பும் இணைந்திருக்கிறார்.
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ தொடர்பாக கிச்சா சுதீப், “சமீபத்திய படங்களில் மிகச் சிறந்த எழுந்து மற்றும் செயல்பாடு. கதை சொல்லும் விதத்தில் நிச்சயமாக ஒரு மைல்கல் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம். இப்படம் என்னை இருக்கையிலேயே கட்டிப்போட்டது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அதன் சொந்த தருணத்திற்கான இடமும் இருக்கிறது. மேலும் ஒவ்வொரு கதாபாத்திரமும் நடிகர்களால் குறைபாடு இல்லாமல் சித்திரித்திருக்கிறார்கள். அருமையான நடிகர்கள் தேர்வு மற்றும் படத்தின் இசை பெரிய சொத்து” என்று தெரிவித்துள்ளார்.
அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. மில்லியன் டாலர் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இப்படம் உலகமெங்கும் மொத்த வசூலில் 80 கோடியை கடந்துவிட்டது. குறைந்த முதலீட்டில் உருவாக்கப்பட்டு பல மடங்கு லாபம் ஈட்டிய படங்களில் முக்கிய இடத்தினை பிடித்திருக்கிறது ‘டூரிஸ்ட் பேமிலி’.
One of the finest writing and execution in recent times.#TouristFamily surely is a landmark story telling which kept me glued to my seat. Each character has it’s own moments and space,,and every character flawlessly portrayed by actors. Fantabulous casting.
Music is another…
— Kichcha Sudeepa (@KicchaSudeep) June 7, 2025