Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, June 28
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»இந்தி ‘பிக்பாஸ்’ புகழ் நடிகை ஷெஃபாலி மரணம்: மாரடைப்பு காரணமா?
    சினிமா

    இந்தி ‘பிக்பாஸ்’ புகழ் நடிகை ஷெஃபாலி மரணம்: மாரடைப்பு காரணமா?

    adminBy adminJune 28, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இந்தி ‘பிக்பாஸ்’ புகழ் நடிகை ஷெஃபாலி மரணம்: மாரடைப்பு காரணமா?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மும்பை: இந்தி மொழியில் ஒளிபரப்பான ‘பிக் பாக்ஸ் 13’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை ஷெஃபாலி ஜரிவாலா. அவர் மும்பையில் நள்ளிரவு உயிரிழந்தார். அவரது மரணத்துக்கு மாரடைப்பு காரணம் என சொல்லப்படுகிறது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஷெஃபாலிக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவரது கணவரும், நடிகருமான பராக் த்யாகி, அவரை மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியில் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து மும்பையில் உள்ள கூப்பர் மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக ஷெஃபாலியின் உடல் கொண்டு செல்லப்பட்டது. வேறொரு மருத்துவமனையில் இருந்து அவரது கொண்டுவரப்பட்ட காரணத்தால் உடற்கூறு ஆய்வுக்கு பின்னர்தான் அவரது மரணத்துக்கான காரணம் தெரியவரும் என அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், மும்பை – அந்தேரி பகுதியில் உள்ள ஷெஃபாலியின் இல்லத்துக்கு விசாரணை மேற்கொள்ள மும்பை போலீஸார் நள்ளிரவு சென்றனர். அங்கு தடயவியல் நிபுணர்களும் ஆய்வு நடத்தினர். ஷெஃபாலியின் மரணத்துக்கான காரணம் குறித்து அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. இதை சந்தேக மரணம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    ஷெஃபாலியின் உடலை வீட்டில் இருந்து கைப்பற்றி போலீஸார் தான் கூப்பர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக காவல் துறை வட்டாரத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கடந்த 2002-ம் ஆண்டு இசை வீடியோ ஆல்பமான ‘Kaanta Laga’ மூலம் ஷெஃபாலி கவனம் ஈர்த்தார். தொடர்ந்து ‘முஜ்சே ஷாதி கரோகி’ என்ற படத்தில் சல்மான் கான் உடன் நடித்தார். 2019-ல் ‘பேபி கம் நா’ என்ற வெப் சீரிஸில் நடித்தார். நடன நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்றுள்ளார். இந்நிலையில், 42 வயதான அவர் திடீரென அடைந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    குட் டே – திரை விமர்சனம்

    June 28, 2025
    சினிமா

    ‘அடுத்து இயக்கம் தான்’ – பிரதீப் ரங்கநாதன் முடிவு

    June 28, 2025
    சினிமா

    ‘மெட்ராஸ் மேட்னி’ ஓடிடியில் ஜூலை 4-ல் ரிலீஸ்!

    June 28, 2025
    சினிமா

    ‘விடாமுயற்சி’ படம் குறித்து மனம் திறந்த இயக்குநர் மகிழ் திருமேனி!

    June 28, 2025
    சினிமா

    கமல்ஹாசனுக்கு ஆஸ்கர் விருது குழு அழைப்பு

    June 28, 2025
    சினிமா

    கவுதம் ராம் கார்த்திக்கின் புதிய படம் அறிவிப்பு!

    June 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘தர்ம சக்ரவர்த்தி’ பட்டம் வழங்கல்!
    • பாஜகவுக்கு மீனவர் நலனில் கடுகளவு கூட அக்கறை இல்லை – செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
    • இயற்கையாகவே இதயத்தை பலப்படுத்துங்கள்: உண்மையில் வேலை செய்யும் 5 உதவிக்குறிப்புகள் – இந்தியாவின் நேரங்கள்
    • குட் டே – திரை விமர்சனம்
    • புதுச்சேரி பாஜகவில் பிளவை தடுக்க 3 எம்எல்ஏக்கள் ராஜினாமா – சாய் சரவணக்குமார் ஆதரவாளர்கள் எதிர்ப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.