தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
தனுஷ் இயக்கி, நடித்துள்ள படம், ‘இட்லி கடை’. இதில் ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கிரண் கவுஷிக் ஒளிப்பதிவு செய்துள்ளார். அக். 1-ல் வெளியாகும் இந்தப் படத்தின் ட்ரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? – பாரம்பரிய உணவுக்கு ஃபாஸ்ட் ஃபுட்-க்கும் இடையிலான போராட்டமே கதைக்களம் என்பதை ட்ரெய்லரில் தெரிந்து கொள்ள முடிகிறது. கிராமத்தில் இட்லி கடை வைத்திருக்கும் ராஜ்கிரணின் மகனான தனுஷ் நகரத்துக்குச் சென்று துரித உணவுகளை பிரதானமாக தயாரிக்கும் மிகப்பெரிய ரெஸ்டாரண்ட் நிறுவனத்தில் பணியில் இருக்கிறார். பின்னர் தன்னுடைய கிராமத்துக்கே திரும்பி தன் அப்பாவின் இட்லி கடையை நடத்துகிறார்.
ராஜ்கிரண், அருண் விஜய், நித்யா மேனன், சமுத்திரக்கனி, பார்த்திபன் என பெரும் நடிகர் பட்டாளமே ட்ரெய்லரில் வருகிறது. ஜிவி பிரகாஷின் பின்னணி இசை கவனிக்க வைக்கிறது. சென்டிமெண்ட் காட்சிகளை வலிந்து திணிக்காமல் இயல்பாகவும் உணர்வுபூர்வமாகவும் காட்சிகள் இருந்தால் படத்தின் வெற்றி உறுதி. ‘இட்லி கடை’ ட்ரெய்லர் வீடியோ: