‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘கண்ணை நம்பாதே’ இயக்கிய மு.மாறன் அடுத்து இயக்கியுள்ள படம், ‘பிளாக்மெயில்’.
ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தை ஜேடிஎஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரித்துள்ளார். கதாநாயகியாக தேஜு அஸ்வினி நடித்துள்ளார். ஸ்ரீகாந்த், பிந்து மாதவி, வேட்டை முத்துக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக், ஹரிபிரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சாம் சிஎஸ் இசை அமைத்துள்ளார். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ஆக.1-ல் இந்தப் படம் வெளியாகிறது.