தமிழ் சினிமாவின் முன்னணி ஸ்டன்ட் இயக்குநர் சில்வா. இவர் தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவில் 100-க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஸ்டன்ட் இயக்குநராக பணியாற்றி இருக்கிறார்.
சில படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இவருக்குச் சிறந்த ஸ்டன்ட் இயக்குநருக்கான மழவில் மனோரமா விருது கேரளாவில் சமீபத்தில் வழங்கப்பட்டது.
நடிகர் பிருத்விராஜ் இயக்கி, நடித்து வெளியான ‘எல் 2: எம்புரான்’, மோகன்லால் நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘துடரும்’ ஆகிய படங்களுக்காக ‘ஸ்டன்ட்’ சில்வாவுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ‘ஸ்டன்ட்’ சில்வா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.