அர்ஜுன் நடிக்க புதிய படமொன்றை ஏஜிஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ‘டிராகன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, புதிய படம் எதையும் தயாரிக்காமல் உள்ளது ஏஜிஎஸ் நிறுவனம்.
அந்நிறுவனம் அடுத்த தயாரிப்பாக பல்வேறு படங்கள் வரிசையில் இருந்தாலும், எந்தவொரு படத்தையும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. தற்போது அர்ஜுன் நடிக்கவுள்ள புதிய படத்தினை விரைவில் படப்பூஜையுடன் தொடங்கவுள்ளது.
அர்ஜுன் நடிக்கவுள்ள படத்தினை பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் இயக்கவுள்ளார். இதில் அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். இந்தப் படத்தின் கதைக்களம் அப்பா – மகளுக்கு இடையே நடக்கும் கதையாக இருக்கும் என திரையுலகில் பேசப்படுகிறது. இதில் நடிப்பதற்கு இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் தொகையை அர்ஜுன் சம்பளமாக பெற்றிருக்கிறார்.
அர்ஜுன் படத்தைத் தொடர்ந்து, சிம்பு நடிக்கும் 50-வது படம், சிம்பு – அஸ்வத் மாரிமுத்து இணையும் படம், பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிக்கும் படம், சந்தானம் நடிக்கும் படம் உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரிக்கவுள்ளது ஏஜிஎஸ் நிறுவனம். இவை அனைத்துமே முதற்கட்ட பணிகளில் இருக்கிறது.