அர்ஜுன் நடிக்கவுள்ள புதிய படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள புதிய படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இப்படத்தினை பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த சுபாஷ் இயக்கவுள்ளார். இதில் அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளார்கள். இதில் படக்குழுவினர் கலந்து கொண்ட பூஜை சென்னையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதன் பூஜையில் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் மற்றும் அஸ்வத் மாரிமுத்து இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். விரைவில் இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவுள்ளது. ‘ஏஜிஎஸ் 28’ என்று அழைக்கப்படும் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியுசராக அர்ச்சனா கல்பாத்தி, அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசராக ஐஸ்வர்யா கல்பாத்தி, நிர்வாக தயாரிப்பாளராக எஸ்.எம். வெங்கட் மாணிக்கம் பணியாற்றுகின்றனர்.
ஜான் கொக்கேன், திலீபன், பவன், அர்ஜுன் சிதம்பரம், விவேக் பிரசன்னா, பாலா ஹசன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். ‘கே ஜி எஃப்’ படத்தில் தனது அதிரடி இசை மூலம் கவனத்தை ஈர்த்த ரவி பஸ்ரூர் இப்படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் E ராகவ் படத்தொகுப்பை கவனிக்கவுள்ளார்.