நடிகர் அபினய்க்கு பாலா நிதியுதவி வழங்கி வெளியிட்டுள்ள வீடியோ பதிவுக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அபினய். அப்படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, பல்வேறு படங்கள் நடித்து வந்தார். பின்பு பட வாய்ப்புகள் இல்லாமல் முடங்கினார். அவருடைய உடல்நிலையும் அவருக்கு ஒத்துழைக்கவில்லை.
சமீபத்தில் அபினய்க்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சைக்கு பணமில்லாமல் தவித்து வந்தார். இதை அறிந்த நடிகர் பாலா அவரை நேரில் சந்தித்து 1 லட்ச ரூபாய் வழங்கியுள்ளார். இந்த வீடியோ பதிவினையும் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ பதிவை ஒட்டி இணையத்தில் பலரும் பாலாவுக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். மேலும், அபினய் சீக்கிரம் குணமாகி நடிப்புக்கு திரும்ப வேண்டும் என்று தெரிவித்து வருகிறார்கள்.