நடிகர் ராகவா லாரன்ஸ், தனது தாயின் பெயரில் ‘கண்மணி அன்னதான விருந்து’ எனும் புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
இதுகுறித்து ராகவா லாரன்ஸ் கூறும்போது, “பணக்காரர்கள் மட்டுமே சாப்பிடும் உயர்தர அறுசுவை உணவை, ஏழை குழந்தைகளும் சாப்பிட வேண்டும், பசியில் யாரும் வாடக்கூடாது எனும் நோக்கத்தில், என் அன்னையின் பெயரில் ‘கண்மணி அன்னதான விருந்து’ திட்டத்தைத் தொடங்கி இருக்கிறேன்.
20 வருடத்துக்கு முன் என் வீட்டில் 60 குழந்தைகளுக்கு உணவளித்தேன். இப்போது எங்கெல்லாம் பசியால், எளியோர் வாடுகிறார்களோ, அவர்களைத் தேடிச்சென்று எனது கைகளால் உணவளிக்கும் வகையில், இந்த திட்டத்தை ஆரம்பித்துள்ளேன். இதை நரிக்குறவர்கள் இன பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் தொடங்கியதில் மகிழ்ச்சி. யாரும் பசியால் வாடக்கூடாது, அனைவரின் பசியையும் விருப்பத்தையும் பூர்த்தி செய்யும் இந்த திட்டத்தை மனநிறைவுடன் தொடர்வேன்” என்றார்.