இசையமைப்பாளர் அனிருத் என்றாலே ஹிட் மெஷின் என ‘மதராஸி’ படத்தின் புரோமோ நிகழ்வில் நடிகர் சிவகார்த்திகேயன் பகிர்ந்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம், ‘மதராஸி’. இதில் ருக்மணி வசந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படம் செப்.5-ம் தேதி வெளியாகிறது.
இந்த படத்தின் புரோமோஷன் நிமித்தமாக பல்வேறு நகரங்களுக்கு படக்குழு பயணித்து வருகிறது. படத்தின் நாயகன் என்ற முறையில் நடிகர் சிவகார்த்திகேயனும் இதில் பங்கேற்றுள்ளார்.
“இயக்குநர் முருகதாஸ் சார் இயக்கத்தில் நடிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. பல முன்னணி நடிகர்களை இயக்கியவர். அவருடன் இணைந்து பணியாற்றியதில் சந்தோஷம். அதனால் அவருக்கு இந்நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மதராஸி படம் சாலிடாக உருவாகி உள்ளது.
இந்த படத்துக்கு இசையமைப்பாளராக எனது உயிர் நண்பர் அனிருத் பணியாற்றி உள்ளார். அனிருத் என்றாலே ஹிட் மெஷின். அவர் கொடுக்கும் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகின்றன. பிஜிஎம் இசை சும்மா தீயாக இருக்கும். அதனால் அந்த படமும் ஹிட் ஆகிறது. இந்த படத்தின் தயாரிப்பாளர் திருப்பதி பிரசாத் மிகவும் எளிய மனிதர்” என சிவகார்த்திகேயன் பேசினார்.