அந்த 4 பேரு லிஸ்ட்டில் இருக்க மாட்டேன் என்று ஜி.வி.பிரகாஷ் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
தனுஷ் இயக்கி நடித்திருக்கும் படம் ‘இட்லி கடை’. டான் பிக்சர்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்துக் கொண்டார்கள்.
இதன் விழா மேடையில் ‘இட்லி கடை’ குறித்தும், தனுஷ் உடனான நட்பு குறித்தும் பேசினார் ஜி.வி.பிரகாஷ். பின்பு “’ராயன்’ படத்தில் தம்பிகளில் ஒருவராக நடிக்க தனுஷ் கேட்டார். ஆனால் அந்த கதாபாத்திரம் அவருக்கு துரோகம் செய்ய வேண்டியிருந்ததால், அதில் நடிக்க மறுத்துவிட்டேன். படத்தில் கூட என் நண்பனுக்கு துரோகம் செய்ய மாட்டேன். அந்த 4 பேரு லிஸ்ட்டில் எப்போதும் இருக்க மாட்டேன்” என்று தனது பேச்சில் குறிப்பிட்டார் ஜி.வி.பிரகாஷ்.
சத்யராஜ், நித்யா மேனன், பார்த்திபன், ஷாலினி பாண்டே, அருண் விஜய் உள்ளிட்ட பலர் தனுஷ் உடன் ‘இட்லி கடை’ படத்தில் நடித்திருக்கிறார்கள். அக்டோபர் 1-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்துக்கு இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்திருக்கிறார். அக்டோபர் 21-ம் தேதிக்கு மேல் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என கூறப்படுகிறது