சென்னை: கரூரில் தவெக பிரச்சார கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வேதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சந்தோஷ் நாராயணன் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: “கரூர் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட அப்பாவிகளின் உயிரிழப்பு மிகவும் தனிப்பட்ட முறையில் பாதித்துள்ளது. உண்மையிலேயே என் இதயத்தை இது நொறுக்கியுள்ளது. இந்த ஏற்றுக்கொள்ள முடியாத துயரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அமைதி காண வேண்டும் என நான் மனதார விரும்புகிறேன். இந்த கொடூரமான சம்பவத்தினால் ஏற்பட்ட காயம், கோபம் மற்றும் இயலாமை ஆகியவற்றில் இருந்து என்னை மீட்க எனக்கு சிறிது காலம் தேவைப்பட்டதற்காக வருந்துகிறேன்.
புரிதலற்ற பேராசை, அதிகாரம் மற்றும் புகழுக்கான தீராத பசி, பொதுமக்களின் கண்ணோட்டத்தை மாற்றக்கூடிய முழுமையான முயற்சி இல்லாமை, இன்னும் கூடுதல் அதிகாரத்திற்கான பேய்த்தனமான தாகம், அத்துடன் அதிக அதிர்ஷ்டமும் சேர்ந்து நம்மை இங்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது. வெளிப்படைத்தன்மையை செயல்படுத்தும் ஒரு சூழலை உருவாக்க நாம் ஒரே குடும்பமாக ஒன்றிணையும் வரை மட்டுமே இவை அனைத்தும் தொடரும்.
இன்றைய டிஜிட்டல் உலகில், இது சாத்தியமே. அந்தக் கட்டத்தை அடையும் வரையில், இருக்கும் வேறுபட்ட கருத்துக்களை நாம் நிறுத்தி வைத்திருக்கலாம். இந்த துயரத்தில் இழந்த அழகான, அப்பாவி ஆத்மாக்கள் சாந்தியடையட்டும். தயவுசெய்து உங்களை கவனித்துக் கொள்ளுங்கள் – நான் உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன், உங்கள் நல்ல ஆரோக்கியம் மற்றும் அமைதிக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்” இவ்வாறு சந்தோஷ் நாராயணன் தெரிவித்தார்.
The loss of innocent lives in the Karur stampede feels deeply personal and has truly shattered me. I sincerely wish the families and friends of the victims find peace in the face of this unforgivable tragedy. I am sorry it took a while for me to collect myself from the hurt,…
— Santhosh Narayanan (@Music_Santhosh) September 30, 2025