அட்லி – அல்லு அர்ஜுன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ரம்யா கிருஷ்ணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ரம்யா கிருஷ்ணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை விரைவில் படமாக்கவுள்ளது படக்குழு.
தற்போது அல்லு அர்ஜுனுடன் தீபிகா படுகோன், ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாகூர், ஜான்வி கபூர் ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களது காட்சிகள் அவ்வப்போது மும்பையில் கடும் கெடுபிடியுடன் படமாக்கப்பட்டு வருகிறது. எந்தவொரு புகைப்படமும் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியாகி விடக்கூடாது என்பதில் படக்குழு மிகக் கவனமாக செயல்பட்டு வருகிறது.
இப்படத்தின் சண்டைக் காட்சிகளில் முழுமையாக வெளிநாட்டு கலைஞர்களே பணிபுரியவுள்ளனர். மேலும் பல்வேறு ஹாலிவுட் நிறுவனங்கள் இதன் கிராபிக்ஸ் காட்சிகளை மேற்கொள்ள இருக்கிறது. இந்தியாவில் இருந்து தயாராகும் படங்களில் அதிக பொருட்செலவைக் கொண்ட படம் என்று இப்போதைக்கு தகவல் வெளியாகி இருக்கிறது.