அஜித் நடிக்கவுள்ள படத்தினை ‘மார்கோ’ இயக்குநர் இயக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
’மார்கோ’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியின் மூலம் அனைவராலும அறியப்பட்டவர் ஹனீஃப் அதானி. இவருடைய அடுத்த படம் குறித்த பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. அதில், தனது அடுத்த படத்தினை தில் ராஜு தயாரிப்பில் உருவாக்க இருக்கிறார் என்பது உறுதியானது. அது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பும் சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.
தற்போது இப்படத்தில் அஜித்தை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் தில் ராஜு. அஜித்தின் சம்பளம் உள்ளிட்ட விவரங்கள் அனைத்துமே இதில் பேசப்பட்டதாக தகவல். இந்தப் பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட விஷயங்களை வைத்து, படத்தின் பட்ஜெட்டை போடுவார்கள். இது லாபகரமாக அமையும் பட்சத்தில் அஜித் – ஹனீஃப் அதானி கூட்டணி அமையும் எனக் கூறப்படுகிறது. இந்த தகவல் தெலுங்கு ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
முன்னதாக, வஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’ படத்தினை தயாரித்தவர் தில் ராஜு. இப்படம் எதிர்பார்த்த வசூலைப் பெறவில்லை என்றாலும், தமிழகத்தில் நல்ல வசூலை ஈட்டியது. விஜய்யைத் தொடர்ந்து அஜித் படத்தினை தயாரிக்க தில் ராஜு பேச்சுவார்த்தையை தொடங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.