அக்டோபர் 5-ம் தேதி முதல் பிக் பாஸ் சீசன் 9 தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசனை தொகுத்து வழங்க இருக்கிறார் விஜய் சேதுபதி. தற்போது இந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பு அக்டோபர் 5-ம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவித்துள்ளார்கள். இதனால் இதன் போட்டியாளர்கள் யார் என்ற விவாதம் இணையத்தில் தொடங்கி இருக்கிறது. ஆனால், போட்டியாளர்கள் விவரத்தினை இதுவரை விஜய் தொலைக்காட்சி அறிவிக்கவில்லை.
தமிழில் மிக பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று ‘பிக்பாஸ்’. கடந்த 2017 முதல் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். 7 சீசன்கள் வரை கமல்ஹாசன் தொகுத்து வழங்க, கடந்த ஆண்டு 8 சீசனை விஜய் சேதுபது தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் இதுவரை ஆரவ், ரித்விகா, முகேன் ராவ், ஆரி அர்ஜுனன், ராஜு ஜெயமோகன், அசீம், அர்ச்சனா ரவிச்சந்திரன் மற்றும் முத்துக்குமரன் உள்ளிட்டோர் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பாக்க பாக்க தான் புரியும்.. போக போக தான் தெரியும்
Bigg Boss Tamil Season 9 | Grand Launch – அக்டோபர் 5 முதல்.. #BiggBossSeasonTamil9 #OnnumePuriyala #BiggBoss9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/ZdbtAolWH8
— Vijay Television (@vijaytelevision) September 13, 2025