Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 10
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»Career Choice: உங்களுக்கு பொருத்தமான படிப்பை தேர்வு செய்வது எப்படி?
    கல்வி

    Career Choice: உங்களுக்கு பொருத்தமான படிப்பை தேர்வு செய்வது எப்படி?

    adminBy adminMay 11, 2025No Comments4 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    Career Choice: உங்களுக்கு பொருத்தமான படிப்பை தேர்வு செய்வது எப்படி?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தன்னைப் பற்றிய புரிதல், பணி வாழ்க்கையைத் தேர்வு (Career Selection) செய்வதில் மிக முக்கியமானது. உங்களைப் பற்றி முழுமையாக அறிந்து கொண்டு, அதற்கேற்ற படிப்பை தேர்வு செய்து படிக்கும் போதும், அதன் பிறகு அது தொடர்புடைய பணிக்கு செல்லும் போதும் உங்கள் முழுத் திறனையும் பயன்படுத்தி சாதனைகள் படைக்க முடியும். உளவியலாளர் பிராங்க் பார்சன் கருத்துப்படி, பணி வாழ்க்கையைத் தேர்வு செய்வதன் மூன்று முக்கிய காரணிகளுள் ஒன்று தன்னைப் பற்றி அறிதல் ஆகும்.

    தன்னைப் பற்றிய புரிதல் மற்றும் படித்து முடித்த பின்பு செய்யப்போகும் வேலையை பற்றிய புரிதல், இவை இரண்டுக்குமிடையே உள்ள தொடர்பே வாழ்க்கைப் பணியை (Career Choice) தேர்வு செய்தல் என்கிறார் பிராங்க் பார்சன். ஆய்ந்தறிந்து இதனை அறிவியல் பூர்வமான உளவியல் தேர்வுகள் (Psychometric Test) மூலம் உங்களுக்குத் தெளிவுபடுத்துதலே கரியர் கவுன்சிலிங்.

    இதுகுறித்து, கோவை மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் துணை இயக்குநர் எம்.கருணாகரன் கூறியது: மாணவர் ஒருவருக்கு தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., படிக்க இடம் கிடைந்திருந்தது. ஆனால், அவர் மருத்துவப் படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்தார். இது குறித்து அவரது தந்தை கவலையுடன் என்னிடம் தெரிவித்தார். ஆனால், மாணவர் மேலும், தனக்கு இஞ்ஜினியரிங் தான் பிடிக்குமென்றும், அதைத்தான் படிக்க விரும்புவதாகவும் தெரிவித்தார். அவருக்கு நடத்தப்பட்ட உளவியல் தேர்வுகளில் அவருக்கு பொறியியல் பாடம் பொருத்தமானது எனத் தெரியவந்தது.

    பின்பு மாணவரின் தந்தையுடன் தனியாகக் கலந்தாய்வு செய்யப்பட்டது. பின்பு மாணவரை பொறியியல் படிப்பில் சேர்த்துவிட அவரது தந்தை ஒப்புக்கொண்டார். தற்போது அந்த மாணவர் மிகுந்த சந்தோஷத்துடன் பொறியியல் படித்துக் கொண்டிருக்கிறார். மாணவருக்கு பொறியியல்தான் படிக்க வேண்டும், பொறியியலில் குறிப்பிட்ட பாடப்பிரிவைத்தான் தேர்வு செய்ய வேண்டும், இந்தக் கல்லூரியில்தான் படிக்க வேண்டும் என்ற பரிந்துரை ஏதும் செய்யப்படவில்லை.

    மாணவர் இயல்பான திறன், ஆர்வம், புத்திசாலித்தனம் போன்றவை சைக்கோமெட்ரிக் தேர்வுகள் மூலம் அறியப்பட்டு, அதனடிப்படையில் மாணவரின் இயல்புக்குப் பொருத்தமான பணி என்ன? மற்றும் அதற்குத் தேவையான படிப்புகள் குறித்த அறிக்கை அளிக்கப்பட்டது.

    பள்ளிப் படிப்பை முடித்தபின்பு, உயர்கல்வியைத் தேர்வு செய்வதில், பெற்றோர்கள், உறவினர்கள், குடும்ப நண்பர்கள், மாணவ, மாணவியரின் மூத்த சகோதர சதோதரிகள் மற்றும் நண்பர்களின் செல்வாக்கு அதிகமாக உள்ளது. சில பெற்றோர்கள், தாங்கள் அடைய முடியாத கனவுகளை தங்களின் பிள்ளைகள் மூலம் நனவாக்க முயலுகின்றனர்.

    டாக்டர் தந்தை தனது பிள்ளைகளை டாக்டராக்க விரும்புவதும், ஆடிட்டர் தந்தை ஆடிட்டராக்க விரும்புவதும், இசைக் கலைஞன் தனது பிள்ளை இசைக் கலையைப் பயில வேண்டும் என்று விரும்புவதும் நாம் அறிந்ததே. தங்கள் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை நல்லபடியாக அமைய வேண்டும் என்ற அதீத அக்கறையின் காரணமாக தங்கள் பிள்ளைகளின் திறன் என்னவென்று தெரியாமலேயே உயர்கல்வியைத் தீர்மானிக்கின்றனர்.

    ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது… – மாணவி ஒருவர் பிளஸ் 2 வகுப்பில் கணிதப் பாடப்பிரிவை படித்து இருந்தார். பள்ளிக்கல்வி முழுவதும் ஆங்கில வழியில் (English Medium) படித்து இருந்தார். ஆனால், பெற்றோர்களின் விருப்பத்துக்கு இணங்க கல்லூரியில் பி.ஏ தமிழ் இலக்கியத்தைத் தேர்வு செய்தார். அவருக்கு கணினி அறிவியல் பாடத்தைப் படிக்கத்தான் விருப்பம் இருந்தது. தமிழ் இலக்கியம் படிப்பதை விரும்பவில்லை. இலக்கியம், கதை, கவிதை போன்றவற்றை விட கணினித்திறன் மற்றும் படைப்பாக்கத் திறன் அவரிடம் மேலோங்கி இருந்தது. அவருக்கு நடத்தப்பட்ட சைக்கோமெட்ரிக் தேர்வுகள் மூலம் மொழியியல் திறன் (Linguistic Intelligence) குறைவாகவே இருந்தது கண்டறியப்பட்டது.

    ஆர்க்கிடெக்சர், கணினி அறிவியல், ஃபேஷன் டெக்னாலஜி போன்ற படிப்புகளை படிப்பதற்கான இயல்பான திறமை இருந்தும், தனது திறமையை முழுமையாக பயன்படுத்த வழி இல்லாத தமிழ் இலக்கியத்தை பெற்றோர்களின் விருப்பத்துக்கிணங்க தேர்வு செய்தார். இது Unrealistic choice. உங்கள் குழந்தை, அதிபுத்திசாலியாக இருந்து, ஆனால் அத்திறனுக்கு குறைவான அல்லது சமமில்லாத ஒரு படிப்பைத் தேர்ந்தெடுப்பது Unrealistic choice.

    உங்கள் மகன் / மகளின் திறன் சராசரியாக இருந்து தேர்ந்தெடுக்கும் படிப்பின் தரம் மிக அதிகமாக இருப்பதும் Unrealistic choice தான். தன்னைப் பற்றிய புரிதல் கரியரை தேர்ந்தெடுப்பதில் ஒரு பாதி எனில், தனது கரியருக்கு பொருத்தமான படிப்புகள், வேலை வாய்ப்புகள், எதிர்கால வளர்ச்சி மற்றும் உயர்கல்வி போன்ற அனைத்துத் தகவல்களையும் திரட்டுவது மறுபாதி என்கிறார் உளவியலாளர் ராபர்ட் ஹப்போக்.

    மாணவர் ஒருவர் தனக்கு உயிரியல் பாடம் பிடிக்காது, அது தொடர்பான மருத்துவப் பாடம் தன்னால் படிக்க முடியாது, படித்து முடித்த பின்பு, அது தொடர்பான டாக்டர் பணி தனக்கு சரிப்பட்டு வராது. ஏனெனில் சேவை மனப்பான்மையுடன், மிகுந்த அர்ப்பணிப்பும் மருத்துவ பணிக்கு அவசியம். தனக்கு எது தெரியாது என்பதை அவர் தெளிவாக தெரிந்து வைத்திருந்தார்.

    மாணவி ஒருவர் ஆர்க்கிடெக்சர் படிப்பதற்கு தேவையான தகுதிகளை (இடம் சார்ந்த மற்றும் கலை அறிவை) இயற்கையாகவே பெற்றிருந்தார். ஆனால் அத்திறன் தனக்கு உள்ளது என்பதை அவர் தெரியாமலே இருந்தார்.

    மாணவி ஒருவர் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்க விரும்பினார். ஆனால் அவரது இயல்பான ஆளுமை Meloncholic வகையினதாகும். ஹோட்டல் நிர்வாகம் தொடர்பான பணிக்குத் தேவையான ஆளுமைப் பண்பு நலன்கள் அவரிடம் இல்லை. இந்த பணியின் தன்மைகள் குறித்தோ இந்தப் பணிக்குத் தேவையான தனித்தகுதிகள், திறமைகள், ஆளுமைப் பண்புகள் தன்னிடம் இல்லை என்பதே தெரியாமல் இருந்தார். தனக்கு எது தெரியாது என்பதே அவருக்குத் தெரியாது.

    மாணவி டெல்பின் பேஷன் டிசைனிங் படிக்க விரும்பினார். இப்படிப்பிற்குத் தேவையான படைப்பாக்கத் திறன், வரையும் திறன், கற்பனைத் திறன் ஆகியவை தனக்கு இருப்பதைத் தெரிந்து வைத்திருந்தார். தனக்கு எது தெரியும், தனது திறனுக்கு எந்தப் படிப்பு சரிப்பட்டு வரும் என்பதைத் தெரிந்து வைத்திருந்தார்.

    சில பணிகள் முழுவதும் தொழில்நுட்பம் சார்ந்தவையாக இருக்கும். தகவல் தொடர்பு திறன் சிலவற்றுக்கு அவசியம் சட்டம், இதழியல், இலக்கியம், உளவியல் போன்றவற்றுக்கு மொழியறிவு அவசியம். ஆழ்ந்து சிந்திக்கும் திறன், தர்க்க சிந்தனை (Logical Thinking), ஆராய்ந்தறியும் திறன் (Analytical Skills) போன்றவை சில பணிகளுக்குத் தேவையானது. சில பணிகளுக்கு உடலுழைப்பு, மன உறுதி, அசாத்திய துணிச்சல் தேவைப்படும்.

    எந்தவொரு துறையிலும் முழுமையான வெற்றி மற்றும் பணிக்கான மனநிறைவைத் (Job Satisfaction) தீர்மானிப்பதில் உங்களது ஆளுமை, தனித்திறன், ஆர்வம் மற்றும் மதிப்பீடுகளுக்கு (Values) முக்கிய பங்குண்டு. இந்தப் பரிமாணங்களில் உங்களைப் பற்றி அறிந்து அதற்குப் பொருத்தமான ஒரு படிப்பைத் தேர்வு செய்து படிக்கும்போதும், படித்து முடித்த பின்பும், அந்தப் படிப்பு தொடர்பான பணிக்குச் செல்லும் போதும் உங்களது எதிர்கால பணிவாழ்க்கை (Career) சிறப்பானதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு பிறகே துணை மருத்துவத்துக்கு கலந்தாய்வு நடத்த வேண்டும்: கல்வியாளர்கள் வலியுறுத்தல்

    July 10, 2025
    கல்வி

    கோவை வேளாண் பல்கலை. மாணவர் சேர்க்கை – இணையவழி கலந்தாய்வு தொடக்கம்

    July 9, 2025
    கல்வி

    புதுச்சேரி இளங்கோ அடிகள் அரசு பள்ளியில் ஏஐ ஆங்கில ஆசிரியை ‘இனியா ஸ்ரீ’!

    July 9, 2025
    கல்வி

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 – புதிய பாடத்திட்டத்தில் சாதிப்பது எப்படி?

    July 9, 2025
    கல்வி

    தொழில்நுட்ப யுகத்தில் பிரத்யேகப் பொறியியல் படிப்புகள் | புதியன விரும்பு 2.0 – 12

    July 9, 2025
    கல்வி

    காம​ராஜர் பிறந்த நாள்: கல்வி வளர்ச்சி தின போட்டிகளில் பங்கேற்க அழைப்பு

    July 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • திடீர் மரணம் ஏற்பட்டால் பிரேத பரிசோதனை கட்டாயம்: கர்நாடக சுகாதார அமைச்சர் தகவல்
    • சினிமா கணிக்க முடியாத விளையாட்டு: ராம்
    • கம்யூனிஸ்ட் கட்சி பற்றி பேச பழனிசாமிக்கு தகுதி இல்லை: முத்தரசன் கண்டனம்
    • ஜாக்கிரதை! காபி மற்றும் தேநீருடன் சரியாக செல்லாத 7 மருந்துகள் – இந்தியாவின் நேரங்கள்
    • ‘தீங்கு விளைவிக்கும் வழிமுறை’: சீன உதவித்தொகை திட்டத்திற்கு எதிராக அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு குடியரசுக் கட்சியினர் கடுமையான எச்சரிக்கையை வெளியிடுகிறார்கள்; இதை பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று அழைக்கவும் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.