சென்னை: அரசு கல்லூரிகளில் உள்ள பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட 19 துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆன்லைனில் இன்று தொடங்குகிறது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம், பிபிடி, பிஏஎஸ் எல்பி செவித்திறன், பேச்சு மற்றும் மொழி, நோய் குறியியல் உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகள் உள்ளன. அரசு மருத்துவ கல்லூரிகளில் 3,256 இடங்களும், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 20,026 இடங்களும் உள்ளன.
அரசு கல்லூரிகளில் உள்ள துணை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களுக்கு சிறப்பு பிரிவு மற்றும் பொது கலந்தாய்வு என்ற சுகாதாரத்துறை இணையதளத்தில் ஜூலை 30-ம் தேதி (இன்று) காலை 10 மணிக்கு தொடங்குகிறது. ஆக. 2 மாலை 5 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்து, கட்டணம் செலுத்தி, இடங்களைத் தேர்வு செய்யலாம்.