மதுரை: மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படும் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வை 15 நாட்களில் வழங்காவிட்டால் போராட்டம் தொடரும் என,பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் எச்சரித்துள்ளனர்.
மதுரை காமராசர் பல்கலையில் பல்வேறு துறைகள் உள்ளன. இவற்றில் முதலில் உதவிப் பேராசிரியராக பணியில் சேருவோர் 1 முதல் 4 ஆண்டு, 4 – 5 ஆண்டு, 5 முதல் 12 மற்றும் 15 ஆண்டுகளில் பேராசிரியர் என, தகுதியின் அடிப்படையில் படிப்படியாக பதவி உயர்வு பெறுவர். தற்போது இப்பல்கலைக்கழகத்தில் உதவி, இணை, பேராசிரியர்கள் என 138 பேர் பணிபுரிகின்றனர். இவர்களில் 99 பேர் பதவி உயர்வுக்கான தகுதி பட்டியலை 2022-ல் துணைவேந்தர், ஆளுநர் பிரதிநிதி உள்ளிட்ட 9 பேர் குழுவினர் வழங்கிய நிலையில் இன்னும் அவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை.

