
சென்னை: தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்புகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்.
சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்று செய்தியாளர்களை சந்தித்து வெளியிட்ட அறிவிப்பில், “2026-ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி முதல் மார்ச் 26-ம் தேதி வரை 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும். பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 9 முதல் பிப்ரவரி 14-ம் தேதி வரை நடைபெறும். மே.8-ம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியாகும்.

