
கல்வி என்பது மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் தன்னம் பிக்கையுடன் வாழக் கற்றுக் கொள்ள வழிவகுப்பதே! தங்களது குழந்தைகளைச் சாதனையாளர்களாக மாற்ற பெற்றோர் எடுக்க வேண்டிய முதல் முயற்சி, சிறந்த கல்வியைக் கொடுப்பதே. கல்வி இல்லாமல் குழந்தைகள் ஒருபோதும் சவால்களை எதிர்கொள்ள இயலாது. கல்வியின் முக்கியத்துவத்தைத் தங்கள் பிள்ளைகளிடம் தொடர்ந்து கவனப்படுத்திக்கொண்டே இருப்பதுதான் பெற்றோர் செய்யும் மிகப் பெரிய நன்மை.
உயர் கல்வியில் கவனம்: கல்வி ஒன்றுதான் மனிதர்களைப் புகழின் உச்சிக்கே கொண்டு போகும். ஓர் ஏழை மாணவரை உலகம் வியக்கும் பணக்காரராக மாற்றும் வல்லமை கல்விக்கே உண்டு. இப்படிப்பட்ட கல்வியோடு, ஒழுக்கமான, அமைதியான, துணிச்சலான, புத்திசாலியான, செயல் வேகம் கொண்ட மாணவர்களை உருவாக்குவதில் பள்ளிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் பெரும் பங்கு உள்ளது. இவ்வாறு சிறந்த மாணவர்களை உருவாக்கினாலும், அவர்களை வெற்றி யாளர்களாக மாற்றுவது நம் அனைவரின் முன் உள்ள மிகப்பெரிய சவாலாக உள்ளது.

