தமிழகத்தில் 25 ஆயிரம் பேர் உட்பட நாடுமுழுவதும் 2.30 லட்சத்துக்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ் முடித்த மருத்துவர்கள், நீட் தேர்வை கடந்த ஆக.3-ம் தேதி எழுதினர். தேர்வு முடிவுகள் ஆக.19-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில், எம்டி எம்எஸ், எம்டிஎஸ் மற்றும் டிப்ளமோ 2025-26-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான முதல் கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியது. அதன்படி, என்ற இணையதளத்தில் நவ.5-ம் தேதி நண்பகல் 12 மணி வரை பதிவு செய்ய வேண்டும். அன்றைய தினம் பிற்பகல் 3 மணி வரை கட்டணம் செலுத்தலாம். அக்.28-ம் தேதி முதல் நவ.5-ம் தேதி நள்ளிரவு 11.55 மணி வரை இடங்களைத் தேர்வு செய்யலாம். நவ.6, 7-ம் தேதிகளில் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 8-ம்தேதி அதன் விவரம் வெளியிடப்படும்.
மேலும் 9-ம் தேதி முதல் 15-ம் தேதிக்குள் இடஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் சேர வேண்டும். 16-ம் தேதி முதல்18-ம் தேதிக்குள் மாணவர்களின் விவ ரங்களை கல்வி நிறுவனங்கள் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இரண்டாம் சுற்றுக் கலந்தாய்வு நவ.19-ம் தேதியும், 3-ம் சுற்றுக் கலந்தாய்வு டிச.8-ம் தேதியும், இறுதியாக காலியாகவுள்ள இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு டிச.30-ம் தேதியும் தொடங்கவுள்ளது.

