சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியத்தால் மாநில தகுதி தேர்வு (செட்) கடந்த மார்ச் 6 முதல் 9-ம் தேதி வரை நடத்தப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், செட் தேர்வில் தமிழ்வழியில் பயின்றோருக்கு (பிஎஸ்டிஎம்) இடஒதுக்கீடு வழங்கி உயர்கல்வி துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
செட் தேர்வு எழுதியவர்களில் தமிழ்வழி ஒதுக்கீட்டின் கீழ் முன்னுரிமை கோரும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் தாங்கள் ஒன்றாம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை தமிழ்வழியில் படித்ததற்கான சான்றிதழ்களை (மாதிரி படிவத்தில் உள்ளபடி) உரிய அலுவலர்களிடம் கையொப்பம் பெற்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb. In.gov.in) ஆகஸ்ட் 7-ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்வோர் மட்டுமே முன்னுரிமை கோர முடியும். இத்தகவலை ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்து உள்ளது.