சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை சென்னையில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று (மே.16) காலை 9 மணியளவில் வெளியிட்டார்.
அதன்படி, 10-ம் வகுப்பில் ஒட்டுமொத்தமாக 93.80% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், மாணவியர் 95.88 சதவீதமும், மாணவர்கள் 91.74 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டைவிட மொத்த தேர்ச்சி விகிதம் 2.25% அதிகரித்துள்ளது. இருப்பினும், வழக்கம்போல் இந்த அண்டும் மாணவர்களைவிட மாணவியர் 4.14 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்
தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 10, 11-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 5 முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெற்றன. இதில் 10-ம் வகுப்பு தேர்வை சுமார் 9 லட்சம் பேரும், 11-ம் வகுப்பு தேர்வை சுமார் 8 லட்சம் பேரும் எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 21-ல் தொடங்கி 30-ம் தேதியுடன் முடிவடைந்தது. தேர்வு முடிவுகள் மே 19-ம் தேதி வெளியிடப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே வெளியிட தேர்வுத் துறை முடிவு செய்தது.
அதன்படி, 10, 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை சென்னையில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று காலை 9 மணியளவில் வெளியிட்டார்.
10-ம் வகுப்பில் ஒட்டுமொத்தமாக 93.80% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், மாணவியர் 95.88 சதவீதமும், மாணவர்கள் 91.74 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டைவிட மொத்த தேர்ச்சி விகிதம் 2.25% அதிகரித்துள்ளது. இருப்பினும், வழக்கம்போல் இந்த அண்டும் மாணவர்களைவிட மாணவியர் 4.14 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்
முதல் 5 மாவட்டங்கள்: தேர்ச்சி விகிதத்தின்படி, சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்சி ஆகிய மாவட்டங்கள் முதல் ஐந்திடத்தில் உள்ளன. அரசுப் பள்ளிகளில் அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற முதல் ஐந்து மாவட்டங்களிலும் சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்சி மாவட்டங்களே இடம்பெற்றுள்ளன.
பாடவாரியாக தேர்ச்சி விகிதம்:
தமிழ்: 98.09%
ஆங்கிலம்: 99.46%
கணிதம்: 96.57%
அறிவியல்: 97.90%
சமூக அறிவியல்: 98.49%
பாடவாரியாக சதம் அடித்தவர்கள் எண்ணிக்கை:
தமிழ்: 8
ஆங்கிலம்: 346
கணிதம்: 1996
அறிவியல்: 10838
சமூக அறிவியல்: 10256 பேர் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
11-ம் வகுப்பில் மொத்தம், 92.09 சதவீதம் மாணவ – மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியர் 95.13 சதவீதமும், மாணவர்கள் 88.70 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களைவிட மாணவியர் 6.43 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி விகிதத்தின்படி, அரியலூர், ஈரோடு, விருதுநகர், கோயம்புத்தூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் முதல் ஐந்திடத்தில் உள்ளன. அரசுப் பள்ளிகளில் அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற முதல் ஐந்து மாவட்டங்களில் அரியலூர், ஈரோடு, நாகப்பட்டினம், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்கள் உள்ளன.
பாடப் பிரிவுகள் வாரியாக தேர்ச்சி விகிதம்:
அறிவியல் பாடப் பிரிவுகள்: 95.08%
வணிகவியல் பாடப் பிரிவுகள்: 87.33%
கலைப் பிரிவுகள்: 77.94%
தொழிற்பாடப் பிரிவுகள்: 78.31%
பாடவாரியாக சதம் அடித்தவர்கள் எண்ணிக்கை:
தமிழ் – 41
ஆங்கிலம் – 39
இயற்பியல் – 390
வேதியியல் – 593
உயிரியல் – 91
கணிதம் – 1338
தாவரவியல் – 4
விலங்கியல் – 2
கணினி அறிவியல் – 3535
வரலாறு -35
வணிகவியல் – 806
கணக்குப் பதிவியல் -111
பொருளியல் – 254
கணினிப் பயன்பாடுகள் – 761
வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் – 117
தேர்வு முடிவுகளை மற்றும் www.tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும் அறியலாம். பள்ளி மாணவர்கள், தனி தேர்வர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் அனுப்பப்படும்.
மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை www.dge.tn.gov.in எனும் வலைதளத்தில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.