சென்னை: நடப்பு கல்வியாண்டுக்கான (2025 – 26) பொதுத் தேர்வு கால அட்டவணை அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
சென்னை கேலக்ஸி ரோட்டரி சங்கம் சார்பில் பால்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்து பள்ளி மாணவர்களுக்கான வினாடி – வினா போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியது: ”இந்த போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் அனைவரும் வெற்றியாளர்கள் தான். ஏனெனில் வெற்றியாளர்களுக்கும் தோல்வி அடைந்தவர்களுக்கும் தான் வரலாற்றில் இடமுண்டு. தற்போதைய சூழலில் அறிவியல், தொழில்நுட்பம் அதீத வளர்ச்சி பெற்றுள்ளது.
இன்றைய தலைமுறையிடம் 4 விஷயங்களை பேசினால், அது குறித்து அவர்கள் 40 தகவல்களை இணையதளத்தில் தேடி அறிந்து கொள்கின்றனர். அந்தளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு வளர்ந்துவிட்டாலும் அதற்கு நிகராக திறன்களை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். வினாடி – வினா போட்டிகளில் பங்கேற்பதால் மூளை புத்துணர்ச்சி அடையும். இதனால் தான் அரசுப் பள்ளிகளில் வினாடி – வினா போட்டி நடத்தப்பட்டு அதில் சிறப்பாக செயல்படும் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்படு கின்றனர்” என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
இதனிடையே, அமைச்சர் அன்பில் மகேஷ் தனது தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நடப்பு கல்வியாண்டுக்கான (2025-26) பொதுத் தேர்வு கால அட்டவணை அக்டோபர் வெளியிடப்படும். எனவே, மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தேர்வுக்கு தயாராக வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் ஆலோசனையின்படி, கடந்தாண்டு போலவே 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபர் மாதம் வெளியிடப்படும்.
இத்துடன் பள்ளிக் கல்வித்துறையின்(2025-2026) நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள காலாண்டு/அரையாண்டுத்… pic.twitter.com/9D0uV89OGk
— Anbil Mahesh (@Anbil_Mahesh) July 29, 2025