புதுச்சேரி: கோடை விடுமுறை பின் பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளிலேயே, ஒரு நாள் தலைமை ஆசிரியர்களாக பள்ளி மாணவர்கள் நியமிக்கப்பட்டனர்.
புதுவையில் இன்று அரசு பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டன. மழலையர் பள்ளிகளில் இனிப்பு வழங்கி ஆசிரியர்கள் மாணவர்களை வரவேற்றனர். லப்போர்த் வீதியில் உள்ள எக்கோல் ஆங்கிலேஸ் அரசு தொடக்கப் பள்ளியில், பன்னீர் தெளித்து சந்தனம் கொடுத்து மாணவர்கள் வரவேற்கப்பட்டனர்.
பள்ளியின் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர் ஹரிஹரன், விடுப்பே எடுக்காமல் பள்ளிக்கு வந்த மாணவர் ஜோஸ்வா ஆகியோரை பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவக்குமார், ஒரு நாள் தலைமை ஆசிரியர்களாக அமர வைத்தார். அந்த மாணவர்களை ஆசிரியர்கள் கவுரவித்து வெகுவாக பாராட்டினர்.