வேளாண் துறையில் பால் உற்பத்தித் துறை மிக முக்கியமானது. உலகின் மொத்த பால் உற்பத்தியில் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது. இதில் இந்தியாவின் பங்கு தற்போது 24 சதவீதம். என்கிறபோதும், இங்கு பால் உற்பத்தி நிறுவனங்களின் எண்ணிக் கையும் பால்வளம் தொடர்பான ஆராய்ச்சிகளின் எண்ணிக்கையும் விரல் விட்டு எண்ணும் அளவிலேயே உள்ளன.வேளாண் ஆராய்ச்சிக்காக மத்திய அரசு ஒதுக்கும் நிதியின் அளவும் முன்பு இருந்ததைவிட இப்போது குறைந் துள்ளது.
பால் உற்பத்தி: விலங்கு நலன், ஊட்டச்சத்து, பண்ணை மேலாண்மை, பால் உற்பத்தியில் சுகாதாரம் – பாதுகாப்பு, பால்வளத் துறையில் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி, சந்தைப் படுத்துதல், விற்பனைக் கொள்கைகள், பால் பொருள்கள் தயாரிப்பு போன்ற தலைப்புகளில் பால்வள ஆராய்ச்சிகள் உலக நாடுகளில் மேற்கொள்ளப்படு கின்றன. சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் பால் வளம் தொடர்பான ஆராய்ச்சிகள் ஏராளமாக நடைபெறுகின்றன.

