சென்னை: பகுதிநேர பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. பாலிடெக்னிக் டிப்ளமா படித்து விட்டு பணியில் இருப்பவர்கள் அதில் இருந்து கொண்டே பகுதி நேரமாக பிஇ படிப்பை படிக்கலாம்.
படிப்புக் காலம் மூன்றரை ஆண்டுகள் ஆகும். இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் (2025-26) பகுதி நேர பிஇ படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று ( 16-ம் தேதி) தொடங்கியது.
பொறியியலில் டிப்ளமா முடித்தவர்கள் என்ற இணையதள இணைப்பை பயன்படுத்தி ஜூலை 11-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இதற்கான தரவரிசை ஜூலை 25-ம் தேதி வெளியிடப்பட்டு ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 28-ம் தேதி நடத்தப்படும். கலந்தாய்வில் கல்லூரியை தேர்வு செய்தவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை ஜூலை 31-ம் தேதி வழங்கப்படும் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.