Last Updated : 12 Jul, 2025 12:39 AM
Published : 12 Jul 2025 12:39 AM
Last Updated : 12 Jul 2025 12:39 AM

சென்னை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: நடப்பு 2025-26-ம் கல்வி ஆண்டில் பள்ளிக்கல்வித் துறையில் வரும் மாவட்ட கல்வி அலுவலர் பதவியில் மொத்தம் 60 காலிபணியிடங்கள் உள்ளன. பதவி உயர்வு, பணியிட மாறுதல் மூலம் அவற்றை நிரப்ப தகுதியான தலைமை ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில் 2 பேர் பணி ஓய்வு பெற்றனர். எஞ்சிய 34 தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு தரப்பட்டுள்ளது. இதேபோல, 24 மாவட்டகல்வி அலுவலர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்கள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி புதிய பொறுப்புகளை ஏற்க வேண்டும்.
FOLLOW US
தவறவிடாதீர்!