
என் பெயர் சரண்யா. நான் காஞ்சிபுரத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் படித்து முடித்தேன். ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவியாக, திறன் பயிற்சிகளுக்காக தனியாக செலவு செய்ய முடியாது என்ற ஒரு வரம்பு எப்போதும் இருந்தது.
அந்த நேரத்தில், எங்களுக்கு நான் முதல்வன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு செமஸ்டரிலும் ஒரு திறன் பயிற்சி கட்டாயமாக சேர்க்கப்பட்டதால், கல்வியுடன் சேர்த்து தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்ப திறன்களையும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இது எனது துறைக்கு நேரடியாக இணைந்த பயிற்சி என்பதால், படித்து முடிந்தவுடன் வேலை தேடுவதற்கான நம்பிக்கை மேலும் உறுதியானது.

