சென்னை: டிஎன்பிஎஸ்சி மூலமாக, 400 உதவி பொறியாளர்கள், 1,850 கள உதவியாளர்களை தேர்வு செய்ய மின் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
மின் வாரியத்தில் உதவி பொறியாளர், கள உதவியாளர், கேங்மேன், லைன்மேன் போன்ற பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்துகின்றன.
மின் வாரிய பணியாளர்கள் வாரியத்தின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு முதல் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்படுகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு முதல் உதவிப் பொறியாளர் உட்பட ஒரு சில பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்ற 258 உதவி பொறியாளர்கள் விரைவில் பணியில் சேர்க்கப்பட உள்ளனர்.
இந்நிலையில். தற்போது 400 உதவி பொறியாளர்கள் மற்றும் 1850 கள உதவியாளர்களை டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்வு செய்ய மின் வாரியம் ஒப்புதல் ஒப்புதல் வழங்கியுள்ளது. டிஎன்பிஎஸ்சியின் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வுகள் மூலமாக இந்த பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.