Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, August 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு: 3,935 காலிப்பணியிடங்கள்!
    கல்வி

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு: 3,935 காலிப்பணியிடங்கள்!

    adminBy adminApril 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு: 3,935 காலிப்பணியிடங்கள்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, குரூப் 4 தேர்வில் 3,935 பணியிடங்கள் நிரப்பப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

    இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்: கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 3935 காலிப்பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி IV பணிகளுக்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் 2025-ம் ஆண்டிற்கான ஆண்டுத்திட்டத்தில் குறிப்பிட்டுள்ளவாறு இன்று (25.04.2025) வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் 2504.2025 முதல் 24.05.2025 வரை தேர்வாணைய இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வு 12.07.2025 அன்று நடைபெறும்.

    2018 முதல் 2025 வரையுள்ள 8 ஆண்டுகளில், முதன்முறையாக தொடர்ச்சியாக அடுத்தடுத்த ஆண்டுகளில் (2024 மற்றும் 2025) ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி IV பணிகளுக்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

    ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – IV (தொகுதி IV பணிகள்) மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளில் (வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் பதவிகள் நீங்கலாக), 2022-ம் ஆண்டு அறிவிக்கையில் மூன்று நிதியாண்டுகளுக்கான காலிப்பணியிடங்களும், 2024ம் ஆண்டு அறிவிக்கையில், இரண்டு நிதியாண்டுகளுக்கான காலிப்பணியிடங்களும் ஆக மொத்தம் ஐந்து நிதியாண்டுகளுக்கு 17799 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அதாவது, ஒரு நிதியாண்டிற்கு சராசரியாக 3560 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

    2025-ம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV(தொகுதி IV பணிகள் மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளில் (வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் பதவிகள் நீங்கலாக), ஒரு நிதியாண்டிற்கு (2025-26) 3678 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2022 மற்றும் 2024 ஆண்டிற்கான அறிவிக்கைகளில் சராசரியாக ஒரு நிதியாண்டிற்கு நிரப்பப்பட்ட காலிப்பணியிடங்களுடன் (3560) ஒப்பிடும்போது, 2025-ம் ஆண்டில் கூடுதலாக காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. மேலும், 2025-ம் ஆண்டு அறிவிக்கையில் வெளியிடப்பட்ட காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, அரசுத் துறை / நிறுவனங்களிடமிருந்து அதிகரித்து பெறப்படும் பட்சத்தில் கலந்தாய்விற்கு முன்பாக மேலும் அதிகரிக்கப்படும் எனத் தெரிவித்து கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    மாணவர் சேர்க்கை இல்லை என்று கூறி 207 அரசுப் பள்ளிகளுக்கு மூடுவதா? – அன்புமணி கண்டனம்

    August 12, 2025
    கல்வி

    அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்எட் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஆக.25 கடைசி

    August 12, 2025
    கல்வி

    பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து – அரியருடன் பிளஸ் 2 பயிலும் 20,000 மாணவர்களின் நிலை என்ன?

    August 11, 2025
    கல்வி

    பொறியியல் கலந்தாய்வு 3-வது சுற்றில் 64,629 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு

    August 11, 2025
    கல்வி

    சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க ஆக.14 வரை அவகாசம்

    August 11, 2025
    கல்வி

    “8-ம் வகுப்பு வரை ஆல் பாஸ், ஆனால்…” – அமைச்சர் அன்பில் மகேஸ் விவரிப்பு

    August 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சிவகாசி: பட்டாசு ஆலை உரிமையாளர்கள் வீடு, அலுவலகங்களில் 2-வது நாளாக சோதனை
    • எல்லா நேரத்திலும் சோர்வாக இருக்கிறதா? மோசமான குடல் ஆரோக்கியம் காரணமாக இருக்கலாம்: எப்படி என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • டெல்லியில் நாய்க்கடிக்கு 7 மாதங்களில் 26,000 பேர் பாதிப்பு: உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த அரசு முடிவு
    • ஷோலே 50 ஆண்டுகள் | இதெல்லாம் ஒரு படமா?
    • குன்றத்தூர் அபிராமி மேல்முறையீடு: காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.