சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மைத் தேர்வுக்கு ஜிடிஎன் அகாடமி கட்டண மில்லா பயிற்சி திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் 100 தேர்வுகளுக்கு இலவச உணவு மற்றும் உறைவிட வசதியுடன் பயிற்சி மற்றும் தொடர் தேர்வுகள் 3 மாதங்களுக்கு கட்டணம் இல்லாமல் வழங்கப்படும்.
கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலான கல்வி சேவையின் மூலம் பல்வேறு துறைகளில் பல ஆளுமைகளை உருவாக்கிய ஜிடிஎன் கல்வி குழுமத்தின் ஒரு அங்கமான ஜிடிஎன் அகாடமி சென்னை தேனாம்பேட்டையில் அதன் நிறுவனர் சத்யா கரிகாலன் தலைமை யில் இயங்கி வருகிறது. அனைத்து விதமான போட்டி தேர்வுகளுக்கும் சிறந்த பயிற்சி அளித்து வருகிறது.
இதன்தொடர்ச்சியாக தற்போது 2025-ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி நடத் தும் குரூப்-1 முதன்மை தேர்வுக்கு தயாராகும் 100 பேருக்கு பயிற்சி மற் றும் தொடர் தேர்வுகளுடன் உணவு மற்றும் உறைவிட வசதியை 3 மாதங்களுக்கு கட்டணம் இல்லாமல் ஜிடிஎன் வழங்க உள்ளது. சமூக பொருளாதார பின்னணி, கல்வித் திறன் பின்னணி, முந்தைய தேர்வுகளின் செயல் திறன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த இலவச பயிற்சிக்கு தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப் படுபவர். இவற் றில் பெண்களுக்கான இடஒதுக்கீடு நடைமுறையும் உண்டு.
இதன்படி குரூப் 1 முதல் நிலை தேர்வின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட ஒரு வாரத்தில் இப்பயிற்சி வகுப்புகள் மற்றும் தொடர் தேர்வுகள் தொடங் கும். இத்திட்டத்தில் இணைய விரும் பும் தேர்வர்கள் தேர்வு முடிவுகள் வெளியானவுடன் ஜிடிஎன் அகாடமி இணையதளத்தில் (www.gtnacademy.com) பதிவு செய்யலாம். நேரிலோ அல்லது 93443 34411 மற்றும் 97979 74605 ஆகிய எண்கள் மூலமாகவோ தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம். இத்தகவலை ஜிடிஎன் அகாடமியின் நிறுவனரும் இயக்குநரு மான சத்யா கரிகாலன் தெரிவித்துள்ளார்.