
சென்னை: சைபர் பாதுகாப்பு துறையில் புதிய பட்டப் படிப்பை, சென்னை விஐடி மற்றும் ஆஸ்திரேலியாவின் டீகின் பல்கலைக்கழகம் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளன. உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக, பல்வேறு புதிய முன்னெடுப்புகளை விஐடி கல்வி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஆஸ்திரேலியாவின் டீகின் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சைபர் பாதுகாப்பு துறையில் புதிய படிப்பை சென்னை விஐடி அறிமுகம் செய்துள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம், டீகின் பல்கலைக்கழகத்தின் இணை முதல்வர் பாஸ்கரன் ஆகியோர் கையொப்பமிட்டனர். இதன் மூலம், சென்னை விஐடியில் இருந்து கணினி அறிவியல் மற்றும் பொறியியல் (சைபர் பாதுகாப்பு) பட்டம், டீகின் பல்கலை.யில் இருந்து இளநிலை சைபர் பாதுகாப்பு (Bachelor of Cyber Security-Honours) பட்டம் ஆகிய 2 படிப்புகளை மாணவர்கள் கற்க முடியும்.

