சென்னை: பத்தாம் வகுப்பு மாணவர் களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் செப்டம்பர் 3-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் கடந்த கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு மே 16-ம் தேதி வெளி யிடப்பட்டது. தொடர்ந்து மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் மே 19-ம் தேதி முதல் வழங் கப்பட்டன. எனினும், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் செப்டம்பர் 3-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இதையடுத்து பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும், தனித்தேர்வர்கள் தங்கள் தேர்வு மையங்களிலும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தேர்வுத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.