சென்னை: சென்னை, ஐஐடி பிரவார்டக் டெக்னாலஜீஸ் ஃபவுண்டேஷன், டிசிஎஸ் அயன் நிறுவனத்துடன் இணைந்து, மெஷின் லேர்னிங் ஆபரேஷன்ஸ் என்ற ஆன்லைன் சான்றிதழ் படிப்பை (எம்எல் ஆப்ஸ்) அறிமுகப்படுத்தி இருக்கிறது.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ), மெஷின் லேர்னிங் (எம்எல்) துறையில் உருவாகும் எதிர்கால வேலைவாய்ப்புகளுக்கு தகுதியான நபர்களை உருவாக்கும் நோக்கில் இந்த படிப்பு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் படிப்பானது மொத்தம் 110 மணி நேரம் கொண்டது.
இப்படிப்பை வெற்றிகரமாக முடிக்கும் பட்டதாரிகளுக்கு ஏஐ, எம்எல், டேட்டா சயின்ஸ் எல்எல்எம் (லார்ஜ் லேங்குவேஜ் மாடல்) துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. அவர்கள் டேட்டா இன்ஜினீயர், மெஷின் லேர்னிங் ஆபரேஷன்ஸ் இன்ஜினீயர், எம்எல் ஆப்ஸ் பிளாட்பார்ம் இன்ஜினீயர், எம்எல் ஆட்டோமேஷன் இன்ஜினீயர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் சேரலாம்.
இந்த ஆன்லைன் படிப்பில் சேர ஆர்வமுடையவர்கள் என்ற இணையதளம் மூலம், ஜூலை 5-ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பு ஜூலை 15-ம் தேதி தொடங்கும் என்று, சென்னை ஐஐடி பிரவார்டக் டெக்னாலஜீஸ் ஃபவுண்டேஷன் அறிவித்துள்ளது.