
சென்னை: தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் சென்னையில் இன்று (அக். 25) பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை கடந்த 20-ம் தேதி (திங்கள்)கொண்டாடப்பட்டது.
தீபாவளி விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் ஆசிரியர்கள், மாணவர்களின் வசதிக்காக, அக்.21-ம் தேதி (செவ்வாய்) ஒருநாள் மட்டும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

